தமிழ்நாடு செய்திகள்

காருக்குள் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை... போலீசார் விசாரணை

Published On 2026-02-24 10:51 IST   |   Update On 2026-02-24 10:51:00 IST
  • மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார்.
  • மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

பேராவூரணி:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியை சோ்ந்தவர் ராஜன். இவரது மகன் மிதுன்குமாா் (வயது 30).

சம்பவத்தன்று காலை மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலின் முன்பு காரை நிறுத்தியவா் காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். அந்த காரின் என்ஜின் நீண்ட நேரமாக இயங்கியபடி இருந்துள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.

உடனடியாக அவர்கள் மிதுன்குமாரை மீட்டு, பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News