தமிழ்நாடு செய்திகள்
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இரண்டு கண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 9 மணியளவில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.