தமிழ்நாடு செய்திகள்

வந்தே பாரத் ரெயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? - பயணிகள் புகார்

Published On 2025-05-31 11:27 IST   |   Update On 2025-05-31 11:27:00 IST
  • மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுகிறது.
  • இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மற்றும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News