தமிழ்நாடு செய்திகள்

அடுத்தகட்ட நடவடிக்கை: ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் செங்கோட்டையன்

Published On 2025-09-06 16:13 IST   |   Update On 2025-09-06 16:13:00 IST
  • பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
  • செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

இதைதொடர்ந்து, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இருப்பினும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில் செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.

நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்கள் செங்கோட்டையன் பண்ணை வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.

அதன்படி, செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டுமென நினைப்பவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை செங்கோட்டையன் தொடங்கினார்.

Tags:    

Similar News