தமிழ்நாடு செய்திகள்

இப்போவே நமக்கு 2 கோடி ஓட்டுகள்... திமுகவை தாண்டி விட்டோம் - ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் கணக்கு!

Published On 2026-01-25 17:18 IST   |   Update On 2026-01-25 17:18:00 IST
  • ஒவ்வொரு தெருவிலும் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்று இருக்கும்
  • திமுக வீட்டிலும் தவெக ஆதாரவாளர் உள்ளார்.

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "ஒவ்வொரு போதிலும் கிட்டத்தட்ட 350 குடும்பம்... 1000 - 15000 ஒட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு தெருவிலும் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்று... ஆனால் தவெகவிற்கு என்று ஒரு வீடு கிடையாது. என்னது தவெகவிற்கு ஒரு வீடு கூட இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் திமுக வீட்டிலும் தவெக ஆதாரவாளர் உள்ளார். அதிமுகவில் தவெக ஆதாரவாளர் உள்ளார். எல்லா கட்சியின் வீட்டிலும் தவெக ஆதாரவாளர்கள் இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திற்கு 1 ஓட்டு என்றால் 2.25 கோடி. போன தேர்தலில் திமுக வாங்கியது 2 கோடி 9 லட்சம் வாக்குகள்... நாம் இப்போதே திமுகவை தாண்டி விட்டோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News