2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு
- பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
- 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியக் கலைஞர் நீலகிரி ஆர் கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், மிருதங்கக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் புதுச்சேரி சிலம்ப கலைஞர் கே.பழனிவேலு ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.