null
கால்களையே பார்த்தால் சூரியன் தெரியாது - இ.பி.எஸ்யை தாக்கி பேசிய மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.
- பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அதன்பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் மோடியுடன் இருப்பவர் சாதா பழனிசாமி அல்ல, தி கிரேட் பத்து தோல்வி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், 'பிரதமர் தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்து விட்டதாக'... வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தால் சூரியன் தெரியாது; நிமிர்ந்து பார்த்தால் தான் சூரியன் தெரியும் பழனிசாமி அவர்களே... ஒருமுறையாவது நிமிர்ந்து பாருங்கள் அப்போதுதான் சூரியன் தெரியும், அதனின் வெப்பமும் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.
பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து வெற்றி பெறுவோம். டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைவணங்காது; தீ பரவட்டும்" அவர் கூறினார்.