4 தொகுதிகளில் ஒருவரால் போட்டியிட முடியுமா? - புஸ்ஸி ஆனந்த் பேச்சால் சர்ச்சை
- விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், "விஜயால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும். ஆனால், சட்டப்படி 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும்" என தெரிவித்தார்.
மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் ஒருவரால் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.