தமிழ்நாடு செய்திகள்

நீட் ரத்து தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது: இபிஎஸ்

Published On 2025-04-08 17:01 IST   |   Update On 2025-04-08 17:08:00 IST
  • தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக கூட்டத்தை கூட்டியுள்ளார்.
  • கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. இது ஒரு நாடகம்.

நீட் தேர்வு விவகாரம்: அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது- இபிஎஸ்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026-ல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக 9.4.2025 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, அதிமுக, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News