தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்- நயினார் நாகேந்திரன்

Published On 2026-01-06 12:40 IST   |   Update On 2026-01-06 12:40:00 IST
  • தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது.
  • 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.

நெல்லை:

நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

* தீபத்தூண் வழக்கில் அன்றே உத்தரவை நடைமுறைப்படுத்தி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.

* தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது. பின்னர் நீதிபதிக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றுகிறது.

* 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.

* வேலைக்குச் செல்லாமலேயே தவறான நபர்களுக்கு 100 நாள் வேலையில் ஊதியம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். 

Tags:    

Similar News