தமிழ்நாடு செய்திகள்
தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது வருந்ததக்க விஷயம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்கு பெருமை தான்.
சென்னை:
சி.பா.ஆதித்தனாரின் 44-வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது வருந்ததக்க விஷயம்.
இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்கு பெருமை தான்.
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக்கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.