தமிழ்நாடு செய்திகள்

சென்னை பாடி மேம்பாலம் அருகே கோர விபத்து- தாய், குழந்தை உயிரிழப்பு

Published On 2025-05-17 15:15 IST   |   Update On 2025-05-17 15:15:00 IST
  • பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார்.
  • பலத்த காயங்களுடன் தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பாடி மேம்பாலம் அருகே லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கீழே விழுந்தனர்.

இதில், பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தை கரோலின் பலியான நிலையில், தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News