தமிழ்நாடு செய்திகள்

நாட்டின் ஒற்றுமைக்காக தி.மு.க.வும் - காங்கிரசும் ஒரே அணியில் பயணிக்கிறது: மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-27 10:54 IST   |   Update On 2025-10-27 10:54:00 IST
  • சட்டசபையில் எப்படி பேச வேண்டும் என எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.
  • தி.மு.க.வும் - காங்கிரசும் தற்போது கொள்கை உறவுகளாக பயணிக்கிறோம்.

சென்னை தேனாம்பேட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கரின் இல்லத் திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தி.மு.க. ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

* சட்டசபையில் எப்படி பேச வேண்டும் என எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.

* என் மீது அன்பு கொண்டவர் ராகுல்.

* ராகுல் காந்தி என்னை அண்ணன் என்றே அழைப்பார்.

* தி.மு.க.வும் - காங்கிரசும் தற்போது கொள்கை உறவுகளாக பயணிக்கிறோம்.

* நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

* ராகுலை தவிர யாரையும் நான் சகோதரர் என்று அழைத்தது இல்லை.

* தனி மனித நலனை விட நாட்டின் நலனே முக்கியம் என்று இரு கட்சிகளின் உறவு தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News