மாணவர்கள் வசதிக்காக வார விடுமுறையில் பிரசாரம் செய்கிறார் விஜய் - அமைச்சர் ரகுபதி
- த.வெ.க. விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
- ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது,
* விஜய் வருகையால் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது.
* விஜய் சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம்.
* த.வெ.க. விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
* ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் எல்லாம் தி.மு.க.வுக்கு கிடையாது.
* 2011ல் திடீரென்று தான் தி.மு.க.வை ஆதரித்து வடிவேல் பிரசாரத்திற்கு வந்தார். எந்த ஒரு விளம்பரமும் கிடையாது. அவருக்கு கூடிய கூட்டம் போல் வேறு எங்கும் கூடவில்லை. அது வாக்காக மாறியதா இல்லை.
* சனி, ஞாயிறு தான் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.