தமிழ்நாடு செய்திகள்

முட்டாள்தனம்: கரூரில் விஜய் பரப்புரையில் நடந்த துயரத்தை ஏற்க முடியவில்லை - விஷால் இரங்கல்

Published On 2025-09-28 07:35 IST   |   Update On 2025-09-28 07:35:00 IST
  • கரூர் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
  • உயிரிழந்தவர்களின் குடும்பங்கங்களுக்கு விஜய் தயவுசெய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முழுக்க முழுக்க முட்டாள்தனம். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேட்டு மனம் வேதனைப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது, மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுகிறேன். ஏனெனில் அதுதான் குறைந்தபட்சமாக அந்த கட்சியால் செய்யக்கூடிய விஷயமாகும்.

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News