பா.ஜ.க.வின் கருவிதான் விஜய்- திருமாவளவன்
- கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.
- நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:-
* கரூர் பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை.
* 10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.
* கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.
* நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
* உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார்.
* சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் வீடியோ உறுதிபடுத்துகிறது.
* சங்பரிவார் சக்திகளிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார்.
* தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பா.ஜ.க. தொடங்கி விட்டது.
* தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பா.ஜ.க.வின் கருவி தான் என்பது உறுதியாவதாக கூறியுள்ளார்.