தமிழ்நாடு செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையே சிறப்பு ரெயில்

Published On 2025-12-22 08:43 IST   |   Update On 2025-12-22 08:43:00 IST
  • ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் நாகர்கோவில் சென்றடையும்.
  • வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை செகந்திராபாத் சென்றடையும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு, ஈரோடு-நாகர்கோவில், செந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு ஜங்சன் செல்லும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.

இதேபோல, ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24,31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

மேலும், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News