தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல்: நெரிசல் மிகுந்த இடத்தை பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்? - பிரேமலதா கேள்வி
- இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
- போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குறுகலான பாதை, நெரிசல் மிகுந்த பாதை என நான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.
இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
பெரிய மைதானம் போன்ற இடத்தில் தான் விஜய் பிரசாரத்திற்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.