தமிழ்நாடு செய்திகள்
கரூர் சம்பவம்: த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
- தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும்.
- 41 பேரில் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 41 பேரில் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.