தமிழ்நாடு செய்திகள்

ஜே.பி. நட்டாவின் தமி்ழ்நாடு பயணம் ரத்து..!

Published On 2025-10-08 21:16 IST   |   Update On 2025-10-08 21:16:00 IST
  • தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 12ஆம் தேதி பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
  • ஜே.பி. நட்டா தொடங்கி வைத்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் அவர் தனது முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை மதுரையில் தொடங்கி 5 நாட்கள் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டு உள்ளார்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு மதுரையில் வருகிற 12-ந்தேதி பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்துக்கு மதுரை போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.

அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தை பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா தொடங்கி வைத்து பேசுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜே.பி. நட்டாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூடுகிறார்கள். 

Tags:    

Similar News