தமிழ்நாடு செய்திகள்

ஒவ்வொரு தனிமனிதரின் தேவையை தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-11-06 18:26 IST   |   Update On 2024-11-06 18:26:00 IST
  • ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் அடிக்கல்.
  • கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன்.

கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கோவையின் அறிவுச்சின்னமாக எழவுள்ள 'தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மைய'-த்துக்கான அடிக்கல்லை நாட்டி, அப்பொழுதே திறப்பு விழாவுக்கான நாளையும் உறுதியாக அறிவித்தேன்! கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன்!

மாவட்டம்தோறும் - தொகுதிதோறும் – ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன்… உங்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News