உள்ளூர் செய்திகள்
கல்வராயன் மலை பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க 1 வாரம் தடை
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- பெரியார் நீர் வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் நீர் செந்நிறத்தில் உள்ளது.
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கல்வராயன் மலை பெரியார் நீர் வீழ்ச்சியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியார் நீர் வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் நீர் செந்நிறத்தில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை 1 வாரம் தடை விதித்துள்ளது.