தமிழ்நாடு செய்திகள்
கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ்தான் முடிவெடுப்பார் - அமித்ஷா கருத்துக்கு முரணான பதில் கூறிய நயினார்
- தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தெரிவித்தார்.
- இபிஎஸ்தான் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர்" எனறு நயினார் தெரிவித்தார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர், கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ்தான் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் இபிஎஸ்தான். கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ்தான் முடிவெடுப்பார். இபிஎஸ்தான் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர்" எனறு தெரிவித்தார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா பேசியிருந்த நிலையில் நயினார் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.