தமிழ்நாடு செய்திகள்

விசிக-வை திமுக விழுங்கிவிடும்: எடப்பாடி பழனிசாமி

Published On 2025-07-22 21:32 IST   |   Update On 2025-07-22 21:59:00 IST
  • எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார் என்கிறது விசிக.
  • நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் எழுச்சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் எனக் கூறினார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுக- பாஜக கூட்டணி அமைத்ததும் ஸ்டாலின் அப்படியே அப்செட் ஆகிவிட்டார். சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்னைப் பார்த்து பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அதிமுக-வில் இருக்கிறாரா? திமுகவில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. அதிமுக கட்சி நம்ம கட்சி. நாம் யார் கூட வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம். இவர் ஏன் சட்டமன்றத்தில் பதறுகிறார். பயம். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.

Full View

பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார். அதிக சீட் தருவதாக கூறினார் என விடுதலை சிறுத்தைகள் கூறுகிறது. நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள். திமுக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் விழுங்கிவிடும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News