தமிழ்நாடு செய்திகள்

2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை- த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2025-09-13 15:45 IST   |   Update On 2025-09-13 15:45:00 IST
  • ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
  • மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள்.

மகளிருக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுகிறார்கள்.

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதி என்னவானது. நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வராது.

கிட்னி திருட்டை முறைகேடு என்று கூறுகிறார்கள். மோசமான கிட்னி திருட்டு விவகாரத்தை முறைகேடு என்கிறார்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

காவரி நீர் பாயும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி கண்டறியாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற வாக்குறுதி என்னவானது.

டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News