தமிழ்நாடு செய்திகள்

மீனவர் பிரச்சனை... இலங்கை சென்ற பிரதமர் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை- மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-07 10:50 IST   |   Update On 2025-04-07 10:50:00 IST
  • இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது.
  • மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது.

* தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

* இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை.

* 97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமே.

* மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது.

* மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நாம் மீனவர்களுடன் இருப்போம் என்றார். 

Tags:    

Similar News