மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழலாமே? - த.வெ.க. தலைவர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
- உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு?
- இதை நீங்கள் ஒழங்குபடுத்த வேண்டாமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி வழங்கும்போது நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, "கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் எனக் கூறி மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே?. உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? இதை நீங்கள் ஒழங்குபடுத்த வேண்டாமா?" என உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், பொதுச்சொத்து சேதமடைந்தால் இழப்பீட்டை வசூலிக்கும் வகையில் தொகை டொபாசிட் செய்ய விதி வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திருச்சி பரப்புரையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தலையிட நேரிடும் என தவெக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருச்சி பிரசாரத்தின்போது த.வெ.க. தொண்டர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.