பா.ம.க.வின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்- அன்புமணி
- பதவி இன்று வரும் போகும், அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்.
- பட்டாளி மக்கள் கட்சி என்பது நான் அல்ல, நீங்கள் தான்.
சென்னை:
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 23 மாவட்ட நிர்வாகிகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதற்கு முன்பாக கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்கினார். உறுப்பினர் அட்டையில் பா.ம.க. பொருளாளர் என்ற இடத்தில் திலகபாமா கையெழுத்திட்டு உள்ளார்.
ஒருபுறம், அன்புமணிக்கு ஆதரவான திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகளை நிறுவனர் ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க. இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பா.ம.க. செயல்தலைவர் அன்புமணி என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், இன்று நிர்வாகிகளுடனா ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.வின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என அன்புமணி ராமதாஸ் பேசினார். மேலும் அவர் கூறுகையில்,
* பதவி இன்று வரும் போகும், அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்.
* பட்டாளி மக்கள் கட்சி என்பது நான் அல்ல, நீங்கள் தான்.
* தொண்டர்கள் இல்லை என்றால் பட்டாளி மக்கள் கட்சி இல்லை என்பதை உணர வேண்டும்.
* சமூக நீதி போராளி ராமதாஸ் கட்சி தொடங்கினார், அவரது கொள்கையை நிலைநிறுத்த களத்தில் இறங்குவோம்.
* இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது இங்கு உள்ளனர்.
* சிறப்பு சந்திப்பு ஒன்று விரைவில் நடைபெறும் என்றார்.