தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2025-04-16 10:55 IST   |   Update On 2025-04-16 10:55:00 IST
  • அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
  • சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

மாமல்லபுத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

* ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது.

* அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.

* சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

* மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். குறிப்பாக பின்தங்கிய மக்களை அழைத்துள்ளார்.

* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News