தமிழ்நாடு செய்திகள்

நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உண்டு- அன்புமணி

Published On 2025-05-30 14:04 IST   |   Update On 2025-05-30 14:04:00 IST
  • இப்போது தான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன்.
  • தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது.

சென்னை:

பா.ம.க. நிர்வாகிகளுடன் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட செயலாளர்களை அழைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

* பா.ம.க.வில் சில குழப்பங்கள் நிலவுகின்றன. அவை விரைவில் சரியாகும்.

* நாம் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துள்ளோம், இதையும் கடந்துசெல்வோம்.

* நமக்கான கொள்கைகளை வகுத்தவர் அய்யா ராமதாஸ், அவர் வழியில் நாம் நடக்க வேண்டும்.

* பா.ம.க.வில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உண்டு. நிறுவனருக்கு அல்ல.

* உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மா தான், அவர் மீது சிறு துரும்பு கூட படவிடமாட்டேன்.

* இப்போது தான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன்.

* தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது.

* இதுபோன்று காலங்கள் வந்துபோகும்... விரைவில் எல்லாம் சரியாகும் என்றார்.

Tags:    

Similar News