தமிழ்நாடு செய்திகள்
நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
- கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது.
- சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் இதுவரை பணி செய்த ஆண்டுகளை கணக்கிட்டு, அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.