தமிழ்நாடு செய்திகள்
கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் காட்டும் ஒன்றிய அரசு - கனிமொழி
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார்.
- திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.