ராமதாசுடன் முற்றும் மோதல்- மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை
- அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
- மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர்.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.
டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்த கட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.
இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்த போது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.