தமிழ்நாடு செய்திகள்

அதிமுக கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக புகார் - போலீசார் விசாரணை

Published On 2025-08-25 07:06 IST   |   Update On 2025-08-25 07:06:00 IST
  • திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
  • அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News