தமிழ்நாடு

தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் மத்திய அரசின் வளர்ச்சிப்பணிகள் தாமதம்: வானதி சீனிவாசன்

Published On 2024-02-09 07:51 GMT   |   Update On 2024-02-09 07:51 GMT
  • பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
  • பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது.

கோவை:

பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தை விட பின்தங்கி இருந்த மாநிலங்கள் தற்போது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு கட்டுப்பாடுகள் போடுவதால் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தமிழகத்தில் தாமதம் ஆகிறது.

தமிழக அரசால் கோவை விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலைய நடவடிக்கையை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்த முடியும்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 10 ஆண்டுகள் குறித்து வெள்ளை அறிக்கையை கொடுத்திருக்கிறார். அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக சமமான நிதி பங்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது

பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக பார்க்க வேண்டும். பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் என்ற வகையில் அதனை நான் வரவேற்கிறேன்.

அரசியலில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. கூட்டணி தொடர்பான தெளிவான முடிவுகள் வரும் வரை தேவையற்ற பேச்சுக்களை அ.தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும்.

பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது. பாஜகவை, மோடியை எதிர்த்தவர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News