தமிழ்நாடு செய்திகள்

துணைவேந்தர் விவகாரம்.. தமிழக அரசுக்கு அதிகாரமில்லை.. ஆளுநர் ஆர்.என். ரவி

Published On 2023-09-26 21:35 IST   |   Update On 2023-09-26 21:35:00 IST
  • அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றச்சாட்டு.
  • தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் இந்த உத்தரவு கடந்த 13-ம் தேதி தமிழ் நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தனி தேடுதல் குழு அமைத்து இருக்கிறது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழை திரும்ப பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி இருக்கிறார்.

Tags:    

Similar News