தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்- சசிகலா கோரிக்கை

Published On 2024-06-14 09:34 IST   |   Update On 2024-06-14 09:34:00 IST
  • நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
  • இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேணடும்.

சென்னை:

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தில் இருந்து வந்து நன்றாக படித்து இன்றைக்கு சென்னையிலேயே ஒரு சிறந்த இதயநோய் மருத்துவராக சேவையாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மத்திய அரசு தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேணடும். தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Tags:    

Similar News