தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் நலமும், வளமும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும் - இ.பி.எஸ்.

Published On 2026-01-15 08:37 IST   |   Update On 2026-01-15 08:37:00 IST
  • இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News