தமிழ்நாடு செய்திகள்

மகிழ்ச்சிப் பொங்கல் திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-15 07:11 IST   |   Update On 2026-01-15 07:11:00 IST

இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்!

தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும்! வெல்வோம்_ஒன்றாக!" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News