தமிழ்நாடு

இங்கில்லை... மகாராஷ்டிராவில்... இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா?- ராமதாஸ் கேள்வி

Published On 2024-02-20 08:22 GMT   |   Update On 2024-02-20 09:05 GMT
  • உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.
  • கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

சென்னை :

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சமூக நீதி : இங்கில்லை.... அங்கே!

உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் இல்லை, மகாராஷ்டிராவில்.

உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மகாராஷ்டிரா அரசு.

அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டு, இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி

ஆனால், உச்சநீதிமன்றமே வழங்க வலியுறுத்தியும் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு; கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

இப்போது சொல்லுங்கள்....

இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News