தமிழ்நாடு செய்திகள்

திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்- எடப்பாடி பழனிசாமி

Published On 2023-12-05 18:32 IST   |   Update On 2023-12-05 18:32:00 IST
  • அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • முகாமில் உணவு , மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.

மிச்சாங் புயல் எதிரொலியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

வானிலை மையம் எச்சரித்த போதும் திமுக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை அரசு திட்டமிட்டபடி செயல்படுத்தவில்லை. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். ரூ. 4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாக கூறியது என்ன ஆனது ?. முகாமில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. உணவு , மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் முகாம்களில் மக்கள் நன்கு பராமரிக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News