தமிழ்நாடு செய்திகள்

72 பெண்களுக்கு இருசக்கர வாகனம்-520 பேருக்கு உதவித்தொகை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Published On 2024-03-03 15:29 IST   |   Update On 2024-03-03 15:29:00 IST
  • தி.மு.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்
  • 520 தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு உதவித்தொகை, 520 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

சென்னை:

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தி.மு.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் "மக்களின் முதலமைச்சரின் மனிதநேய திருவிழா" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 72 தி.மு.க. மகளிருக்கு இரு சக்கர வாகனம், 520 தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு உதவித்தொகை, 520 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News