தமிழ்நாடு செய்திகள்
மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில அரசு பஸ்- கார் மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் காயம்
- அரசு பேருந்தும், காரும் மோதியதில் இரண்டு தலைகீழாக கவிழ்ந்தன.
- 15 பயணிகள் காயம் அடைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் முந்திச் செல்ல முயற்சி செய்தபோது இரு வாகனங்களும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.
நேற்று இதே பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அரசுப் பேருந்து டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.