தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள்.

அதிகாரிகள் அதிரடி சோதனை: யானை தந்தங்கள் சிக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

Published On 2023-11-07 08:40 GMT   |   Update On 2023-11-07 08:40 GMT
  • சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
  • தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து யானை தந்தம் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதைத்தொடந்து அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 23 கிலோ எடையில், 2 தந்தங்கள் பறிமுதல் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்து அங்கிருந்த ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்த முருகன் (வயது 34) உள்ளிட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் 2 பேரையும் ராஜபாளையம் சுங்க இலாகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன், சுங்க அலுவலக கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் யானை தத்தங்கள் பதுக்கிய சம்பவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், வினித்குமார் ஆகியோரை போலீசார் இன்று பிடித்து கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News