தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூர் விமானத்தில் எந்திர கோளாறு: 12 மணி நேரம் தாமதம்- பயணிகள் போராட்டம்
- பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.