தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

மணல் கடத்தலை தடுத்த போலீசாரை கொல்ல முயற்சி- படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Update: 2023-05-30 08:34 GMT
  • லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர்.
  • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸ்காரர்களான சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் கார்காவயல் என்ற பகுதியில் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மினி லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அந்த மினி லாரியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழி மறித்தனர்.

பின்னர் லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர். ஆனால் இதனை கேட்காத நிஷாந்த் திடீரென லாரியை போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி அவர்களை கொல்ல முயன்றார். பின்னர் அங்கிருந்து லாரியுடன் தப்பினார்.

இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசார் சரவணன், சதீஷ்குமார் இருவரும் தடுமாறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் பண்ணவயல் கிராமத்தை சேர்ந்த ராஜாவை (வயது31) கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

லாரியை ஓட்டி வந்த நிஷாந்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News