செய்திகள்

அரியலூரில் நாளை பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2019-04-22 10:23 GMT   |   Update On 2019-04-22 10:23 GMT
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #congress #ponparappiissue

சென்னை:

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கு.செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தை கண்டித்து நாளை மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் ரத்தினம் தலைமை தாங்குகிறார். நானும், காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #congress #ponparappiissue

Tags:    

Similar News