செய்திகள்

தருமபுரி அருகே கார் விபத்து- கோவை வியாபாரி மரணம்

Published On 2018-06-02 11:27 IST   |   Update On 2018-06-02 11:27:00 IST
தருமபுரி அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கோவையை சேர்ந்த வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த மல்லைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 51). கொத்தமல்லியை மொத்த விற்பனைக்கு வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்தார்.

இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பகுதியில் கொத்தமல்லி வாங்குவதற்காக காரில் வந்தார். நேற்று மாலை மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தடங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென்று இடதுபக்கத்தில் இருந்து வலது பக்கமாக திரும்பியது.

இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் கார் ரோட்டில் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News