செய்திகள்

பா.ஜனதா ஏஜெண்டுபோல் கர்நாடக கவர்னர் செயல்படுகிறார் - வைகோ குற்றச்சாட்டு

Published On 2018-05-18 05:43 GMT   |   Update On 2018-05-18 05:43 GMT
கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
களக்காடு:

ம.தி.மு.க. வெள்ளி விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நாங்குநேரியில் இன்று நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் மெஜாரிட்டி இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார். 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள குமாரசாமியை அழைக்காமல் எடியூரப்பாவை அழைத்தது மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடியுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது.

தமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையிலும் கூட மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

இவ்வாறு வைகோ கூறினார்.

Tags:    

Similar News