செய்திகள்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரிடம் விசாரணையை அறிக்கையை சமர்பித்தார் சந்தானம்

Published On 2018-05-14 14:22 GMT   |   Update On 2018-05-14 14:22 GMT
நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், இன்று ஆளுநரிடம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #NirmalaDevi #Santhanam #TNGovernor
சென்னை:

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். சந்தானம் குழுவினர் பல்கலைக்கழக அதிகாரிகள், சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. 



இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் சந்தானம் இன்று விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை அறிக்கையை வெளியிட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi #Santhanam
Tags:    

Similar News